தெமட்டகொடயில் இடம்பெற்றது 'தற்கொலைத் தாக்குதல்'; மூவர் உயிரிழப்பு: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

தெமட்டகொடயில் இடம்பெற்றது 'தற்கொலைத் தாக்குதல்'; மூவர் உயிரிழப்பு: பொலிஸ்


தெமட்டகொட பகுதியில் இடம்பெற்றதும் தற்கொலைத் தாக்குதல் எனவும் மூன்று பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொலிசார் தெரிவிக்கின்றனர்.குறித்த பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்றிருந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்ற எட்டாவது குண்டுவெடிப்பு என்பதோடு ஷங்ரிலாவில் இடம்பெற்றதும் தற்கொலைத் தாக்குதல் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்திய ஊடகங்கள் இன்றைய தாக்குதல்களை முஸ்லிம் தீவிரவாத அமைப்பின் செயல் என கடுமையாகப் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இலங்கை பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடாத்தி வருவதுடன் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இந்நிலையில் தாக்குதல்தாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment