விலக மறுக்கும் பூஜித: பதில் பொலிஸ் மா அதிபரை நியமித்த மைத்ரி - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

விலக மறுக்கும் பூஜித: பதில் பொலிஸ் மா அதிபரை நியமித்த மைத்ரி


ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களையடுத்து பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று பதவி விலகியுள்ள போதிலும் பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் வில மறுத்து வரும் நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட டி.ஐ.ஜி சந்தன விக்ரமரத்னவை நியமித்துள்ளார் ஜனாதிபதி.


கடந்த ஒக்டோபரில் இலங்கையில் 'இரு' பிரதமர்கள் பதவியிலிருந்த தொடர்ச்சியில் தற்போது பொலிஸ் மா அதிபர்கள் ஒரே நேரத்தில் பதவியில் உள்ளனர்.

இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே இளங்ககோன் பாதுகாப்பு அமைச்சின் விசேட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment