தவ்ஹீத் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 154 பேர் இதுவரை கைது - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

தவ்ஹீத் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 154 பேர் இதுவரை கைது


இலங்கையில் தவ்ஹீத் பெயர்களில் இயங்கும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட 154 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய தவ்ஹீத் ஜமாத், ஸ்ரீலங்கா மற்றும் சிலோன் தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொழும்பு, குருநாகல், காத்தான்குடி உட்பட முக்கிய இடங்களில் இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது.

அவசரகால சட்டம் அமுலில் உள்ள நிலையில் பரவலாக கைதுகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை உத்தியோகபூர்வ அறிவிப்பின் அடிப்படையிலேயே 154 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment