4 வருடங்களில் 400 'தவ்ஹீத்' பள்ளிவாசல்களை அனுமதித்துள்ள ஹலீம்: தயாசிறி! - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

4 வருடங்களில் 400 'தவ்ஹீத்' பள்ளிவாசல்களை அனுமதித்துள்ள ஹலீம்: தயாசிறி!


முஸ்லிம் விவகார அமைச்சரின் சகோதரரின் அனுசரணையில் வகை தொகையின்றி தவ்ஹீத் பள்ளிவாசல்கள் அமைச்சு ஊடாக பதியப்பட்டு வருவதாக கடந்த காலங்களில் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த நான்கு வருடங்களில் இவ்வாறு 400 தவ்ஹீத் பள்ளிவாசல்கள் அமைச்சு ஊடாக பதியப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார் தயாசிறி ஜயசேகர.


அடிப்படைவாத கொள்கையாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிறிய இடங்கள் கூட பள்ளிவாசல்களாக பதியப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இது தொடர்பில் கண்டும் காணாது இருப்பதாகவும் கடந்த காலங்களில் அரசியல் மட்டத்தில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையிலேயே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ள தயாசிறி, ஜம்மியத்துல் உலமா இதில் தலையிட்டு, தவறுகளை சீர் செய்ய வேண்டும் எனவும் தயாசிறி வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment