விபச்சாரத்துக்கு கல்லெறிந்து மரண தண்டனை: புருனை மீது ஐ.நா விசனம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 April 2019

விபச்சாரத்துக்கு கல்லெறிந்து மரண தண்டனை: புருனை மீது ஐ.நா விசனம்


விபச்சாரம், ஓரினச் சேர்க்கை போன்ற குற்றச் செயல்களுக்கு கல்லெறிந்து மரண தண்டனை வழங்குதல் மற்றும் திருட்டுக்கு கை வெட்டுதல் போன்ற தண்டனைகளுடன் அமுலுக்கு வரவுள்ள புருனையின் புதிய சட்டவிதிகள் தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு விசனம் வெளியிட்டுள்ளது.குறித்த தண்டனைகள் கொடூரமானது எனவும் மனித விரோதமானது எனவும் குறித்த ஆணைக்குழு தெரிவிக்கிறது.

2013ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்த புதிய சட்டவிதிகள் கால தாமதமாகியே முழுமையாக அமுலுக்கு வரவுள்ள நிலையில் புருனை சுல்தானின் ஒப்புதல் தொடர்பில் கடந்த சில காலமாகவே சர்வதேச விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்திருந்தன. இந்நிலையில் இவ்வாரம் புதிய சட்டவிதிகள் அந்நாட்டில் அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் அண்ணல் நபிகளாரை இழிவு படுத்தும் வகையில் பேசுவோருக்கும் மரண தண்டனை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment