நீர்கொழும்பு: தாக்குதலில் உயிரிழந்தோரின் இறுதிச் சடங்குகள் - sonakar.com

Post Top Ad

Tuesday, 23 April 2019

நீர்கொழும்பு: தாக்குதலில் உயிரிழந்தோரின் இறுதிச் சடங்குகள்


ஞாயிறு தினம் நீர்கொழும்பு தேவாலயத்தில் நடாத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பலியானோரின் இறுதிச் சடங்குகள் இடம்பெற்றுள்ளது.


அன்றைய தினம் இடம்பெற்ற எட்டு குண்டுவெடிப்புகளில் 310 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு - கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நகரங்களில் மூன்று தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் மூன்று பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்ததோடு குறித்த தாக்குதலை நடாத்திய அனைவரும் உள்நாட்டவரே எனவும் தேசிய தவ்ஹீத் ஜமாத் எனும் பெயரில் இயங்கிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் தற்சமயம் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment