அச்சுறுத்திக் கைவிடப்பட்ட 'மனைவி': மாவனல்லை சந்தேக நபர்கள் கைதின் பின்னணி - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

அச்சுறுத்திக் கைவிடப்பட்ட 'மனைவி': மாவனல்லை சந்தேக நபர்கள் கைதின் பின்னணி


மாவனல்லை புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தின் பின்னணியில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களுள் ஒருவரான பாத்திமா லத்தீபா என அறியப்படும் பெண் நேற்று முன் தினம் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இன்று இப்ராஹிம் மௌலவியின் புதல்வர்களான சாதிக் மற்றும் சாஹித் கைதாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தம்மைப் பற்றிய உண்மைகள் எதையும் வெளியிட்டால் கொலை செய்யப் போவதாக மிரட்டி தன்னையும் குழந்தையையும் கைவிட்டுச் சென்றதாக லத்தீபா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், லத்தீபாவின் கைதின் பின்னரே சந்தேக நபர்கள் இன்று காலை கம்பளை மற்றும் நாவலபிட்டி பொலிசாரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லத்தீபா தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment