தெமட்டகொட இப்ராஹிம் வீட்டிலிருந்து பெருந்தொகை பணம் - இரத்தினக் கல் மீட்பு! - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

தெமட்டகொட இப்ராஹிம் வீட்டிலிருந்து பெருந்தொகை பணம் - இரத்தினக் கல் மீட்பு!


கடந்த ஞாயிறு கொழும்பு நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல் நடாத்திய நபர்களின் தெமட்டகொட , மஹாவில கார்டன்ஸ் வீட்டில் நேற்றைய தினம் முழு அளவிலான சோதனைகளை நடாத்திய பொலிசார் அங்கிருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள், 15 லட்ச ரூபா பெறுமதியான தங்க ஆபணங்கள் மற்றும் கோடி ரூபா பெறுமதியான நீல நிற இரத்தினக் கற்கன் மூன்றையும் மீட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இன்சாப் இப்ராஹிமின் மனைவியும் குழந்தைகளும் இவ்வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை பிரபல வர்த்தகரான இப்ராஹிம் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இன்சாபினால் நடாத்தப்பட்ட செப்பு தொழிற்சாலை ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு இத்தொழிற்சாலையிலேயே வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment