விக்கிலீக்ஸ் ஜுலியனின் ஏழு வருட புகலிட வாழ்க்கை முடிவு! - sonakar.com

Post Top Ad

Thursday, 11 April 2019

விக்கிலீக்ஸ் ஜுலியனின் ஏழு வருட புகலிட வாழ்க்கை முடிவு!


உலகை திடுக்கிட வைக்கும் அரச தகவல்களை வெளியிட்டு தகவல் புரட்சியை மேற்கொண்ட விக்கிலீக்ஸ் தளத்தின் கூட்டு ஸ்தாபகரான ஜுலியன் அசேன்ஜின் ஏழு வருட புகலிட வாழ்க்கை இன்று முடிவுக்கு வந்துள்ளது.


லண்டன், எக்குவேடர் தூதரகத்தில் கடந்த ஏழு வருடங்களாக தஞ்சம் புகுந்திருந்த ஜுலியனை இன்று ஐக்கிய இராச்சிய பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஸ்வீடனில் போலியாக பாலியல் வல்லுறவு வழக்கைத் தொடர்ந்து அதனூடாக தன்னை அமெரிக்காவுக்கு நாடு கடத்த முயல்வதாக தெரிவித்து ஜுலியன் இவ்வாறு தூதரகத்துக்குள் தஞ்சமடைந்திருந்தார்.இந்நிலையில், இன்று எக்குவேடர் தூதரகம் ஜுலியனை வெளியேறப் பணித்திருந்த நிலையில் பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment