நாளையும் மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை: அகில - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

நாளையும் மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறை: அகில


நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலின் பின்னணியில் நாளையும் மறுதினமும் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.


கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் கொழும்பின் மூன்று ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளினால் பலர் பலியாகியுள்ள அதேவேளை உயிரிழந்தோர் தொகை பற்றி உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன.

விமான நிலைய பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் நாட்டின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment