டுபாயிலிருந்து வந்த மதுஷின் உறவினர் உட்பட அறுவர் கைது! - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 April 2019

டுபாயிலிருந்து வந்த மதுஷின் உறவினர் உட்பட அறுவர் கைது!


டுபாயிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட மதுஷின் உறவினர் உட்பட ஆறு பேர் இன்று அதிகாலை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.மதுஷின் கேளிக்கை நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையில் கைதானவர்களை அந்நாட்டு அரசாங்கம் இலங்கைக்குத் திருப்பியனுப்பி வருகிறது. மதுஷின் வருகையை எதிர்பார்த்து விமான நிலையத்தில் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் இன்று மதுஷின் சகோதரர் முறை உறவினர் ரொமேஷ் சமரசிங்க உட்பட ரிசான் பதுர்தீன், முஹமத் ஜபீர், கயான் பெரேரா, வசந்த ரணசிங்க, சைமன் ஹேவகே ஆகியோர் நாடு திரும்பிய நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கஞ்சிபானை இம்ரானிடம் பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு மதுஷின் சொத்துக்கள் மற்றும் வர்த்தகங்களை முடக்கி வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment