குவைத் சென்ற பணிப்பெண்கள் 26 பேர் நாடு திரும்பினர் - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 April 2019

குவைத் சென்ற பணிப்பெண்கள் 26 பேர் நாடு திரும்பினர்


குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்களாகப் பணிபுரியச் சென்றிருந்த 26 இலங்கைப் பெண்கள் தமது அனுசரணையாளர்கள் அல்லது வீட்டுச் சூழலில் அதிருப்தி காரணமாக தூதரகம் ஊடாக உதவி பெற்று இன்று நாடு திரும்பியுள்ளனர்.


இதில் பெரும்பாலானோர் ஒரு வருடத்திற்கும் குறைந்த காலமே குவைத்தில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தூதரகத்தை தொடர்பு கொண்டிருந்த நிலையில் நாடு திரும்புவதற்கான தற்காலிக கடவுச் சீட்டுகள் வழங்கப்பட்டு குறித்த பெண்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment