இரத்ததானம்: பெருமளவில் மக்கள் ஆர்வம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

இரத்ததானம்: பெருமளவில் மக்கள் ஆர்வம்!


இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களையடுத்து பெருமளவில் இரத்ததானம் செய்வதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருவதுடன் பெரும்பாலான இடங்களில் நீண்ட வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது.இதுவரை 400க்கும் அதிகமானோர் காயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் கொழும்பு - நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பிலும் ஏனைய தனியார் நிறுவனங்களிலும் இரத்ததானம் இடம்பெற்று வருகிறது.

பெருமளவில் மக்கள் திரண்டு வரும் அதேவேளை பல இடங்களில் போதிய இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஆர்வமுள்ளோர் தாம் செல்லக் கூடிய இடங்களை தொடர்பு கொண்டு தகவலறிந்து செல்வது நன்மை தரும் .

No comments:

Post a comment