மாணவர் நலனுக்கே முன்னுரிமை: ஆளுனர் அசாத் - sonakar.com

Post Top Ad

Tuesday 16 April 2019

மாணவர் நலனுக்கே முன்னுரிமை: ஆளுனர் அசாத்


மாணவர்களிற்கு சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் மற்றும்  போதியளவு தளபாட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ். சாலி  தெரிவித்தார்.


வலகெதற மகா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிங்கள, தமிழ் புதுவருட நிகழ்வில் கலந்து கொண்ட போது மேற்படி தெரிவித்தார். மாகாண கல்வியமைச்சர் ரஞ்சித் சோமவன்ச அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். 

பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் பொருட்டு உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  அத்துடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் ஏறத்தாழ 100 பாடசாலைகளில்  பாழடைந்த, மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நிலையில் கட்டடங்கள் காணப்படுவதாகவும்  அவற்றைப் புனரமைப்புச் செய்வதற்கு தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  கூறினார்.

மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதை உறுதிப்படுத்தும் பொருட்டு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துள்ளதாக தெரிவித்தார். பாடசாலைகளில் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு  விஷேட கொடுப்பனவும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வியைத் தொடருவதற்காக பழுதடைந்த தளபாடங்களை அகற்றி புதிய தளபாடங்களை பெற்றுக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் தொடர்புடைய தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் மேலும்  குறிப்பிட்டார். 

-Rasooldeen

No comments:

Post a Comment