கொழும்பு - நீர்கொழும்பு: தற்கொலைத் தாக்குதல்களா என விசாரணை! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

கொழும்பு - நீர்கொழும்பு: தற்கொலைத் தாக்குதல்களா என விசாரணை!


கொழும்பு - நீர்கொழும்பு - மட்டக்களப்பு நகரங்களில் கிறிஸ்தவ மக்களின் முக்கிய வழிபாட்டுத்தினமான இன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் ஆகக்குறைந்தது 138 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பு - கொச்சிக்கடை மற்றும் நீர்கொழும்பு தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதலா என பாதுகாப்பு படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


மூன்று இடங்களிலும் இடம்பெற்ற தாக்குதல்கள் திட்டமிட்டு, குறிப்பிட்ட நேர அளவுக்குள் ஒழுங்குபடுத்தப்பட்டு நடாத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து வழிமுறைகளையும் ஆராய்வதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவங்களில் காயப்பட்டோர் தொகை 400ஐத் தாண்டியுள்ள நிலையில், வைத்தியசாலைகளில் மேலதிக இரத்தம் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றமையும் மனித நேயமுள்ளவர்களின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment