பாதுகாப்பு கெடுபிடிகளும் முஸ்லிம்களும், தலைமைகளும்! - sonakar.com

Post Top Ad

Tuesday 30 April 2019

பாதுகாப்பு கெடுபிடிகளும் முஸ்லிம்களும், தலைமைகளும்!


ஈஸ்ட்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் அரசாங்கமும் கிறிஸ்தவ, பௌத்த மதகுரு பீடங்களும், ஏனைய தேசய சிவில் அரசியல் தலைமைகளும் பிரச்சினையை சரியான கோணத்தில் அணுகி நாட்டில் வன்முறைகள் குறிப்பாக முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்படாமல் உரிய நிலைப்பாடுகளை மற்றும் நடவடிக்கைகளை எடுத்தமை வரவேற்கத்தக்க ஆறுதல் தரும் விடயமாகும்.


அந்த வகையில் மேலே சொல்லப்பட்ட சகல தரப்புக்களுக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம் தலைமைகள் தமது நன்றிகளை சொல்லாலும் செயலாலும் ஒத்துழைப்புக் களாலும் காட்டி வருகின்றனர், மேற்படி மாமூலான நடவடிக்கைகளுக்கு அப்பால் நெற்பட்டுள்ள நெருக்கடியை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர அரசு எடுக்கும் நியாயமான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுவாக நாட்டு மக்களும் குறிப்பாக முஸ்லிம்களும் திருப்தியடைந்துள்ளனர்.

என்றாலும், அவசரகால சட்டத்தின் கீழ் முஸ்லிம் அடிப்படைவாதம், இஸ்லாமிய தீவிரவாதம், ஐ எஸ் ஐ எஸ் பிரவேசம் என்பவற்றை முளையிலேய கில்லி எறிவதாக சபதமிட்டு மேற்கொள்ளப் படுகின்ற நடவடிக்கைகளின் பொழுது அரசின் கூட்டு நடவடிக்கை பிரிவுடன் முஸ்லிம் விவகார அமைச்சின் சிபாரிசிலாவது ஒரு முழுநேர முஸ்லிம் சமய அல்லது பலசமய ஆலோசனைக் குழு ஒன்றும் கடமையில் இருப்பது கட்டாயமாகும்.

ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படைவாதம் அரபு இஸ்லாமியக் கல்லூரிகளில் வேரூன்றுகிறது என்ற ஒரு நிலைப்பாடு பல்ப்வேறு தரப்புக்களாலும் எழுப்பப் பட்டுள்ளதாலும், கல்வி உயர் கல்வி அமைச்சின் கீழ் இல்லை என அமைச்சருக்குப் பதிலாக பிரதமர் தெரிவித்திருப்பதாலும் மத்ரசாகளையும் அதன் பட்டதாரிகளையும் உலமாக்களையும் எவ்வாறு அணுகுவது என்ற விடயத்தில் கூட்டுப் படைத் தலைமையகம் மற்றும் பொலிசாருக்கு போதிய வழிகாட்டல்கள் பெற்றுக் கொடுக்கப் படுவது கடமையாகும்.

குறிப்பாக அரபு இஸ்லாமியக் கலாபீட மாணவர்கள் உலமாக்கள் கற்கும் ,வைத்திருக்கும் அரபு நூல்களை சஞ்சிகைகளை இனம் காணும் அறிவும் தகைமையும் பாதுகாப்புத் தரப்புக்களிடம் இருக்க மாட்டது, எனவே அவசரகால சட்டத்தின் கீழ் சந்தேகங்கள் ஏற்படின் கைது செய்தல் தடுத்து வைத்தல் போன்ற கெடுபிடிகள் நியாயமாக ஏற்பட இடமிருக்கிறது.

அடுத்ததாக, இந்த நாட்டில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றன, இப்பொழுது தேசிய தவ்ஹீத் ஜமாஅத் எனும் தீவிரவாத அமைப்பிற்கு புறம்பாக சகல தவ்ஹீத் ஜமாத்துகளும் காரசாரமான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன, அதுமட்டுமலாமல் ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப் படுகின்றன, ஏற்கனவே இலங்கையில் மேற்கொள்ளப் பட்ட காழ்ப்புணர்வு பரப்புரைகளும், உள்வீட்டு இயக்க மோதல்களும் அவ்வாறான சந்தேகங்களை வலுப்படுத்துவதாக தெரிகிறது.

சில இடங்களில் மாணவர் நிகழ்வுகள், தலைமைத்துவப் பயிற்சிகள் பட்டறைகளுக்காக தயாரிக்கப் பட்ட ஆவணங்கள் நூல்கள் சஞ்சிகைகள் போன்றவை கூட பாதுகாப்புத் தர்ப்புக்களிற்கு சந்தேகங்களை ஏற்படுத்தத் இடமிருக்கிறது.

முஸ்லிம் மதரது அபாய நிகாப் புர்கா என்பவற்றிற்கு அப்பால் ஆலிம்களும் அரபு மதரசா மாணவர்களும் சில அமைப்பைச் சேர்ந்தவர்களும் அண்மைக் காலமாக அணிந்து வரும் நீண்ட ஜுப்பாக்கள் தௌப்கள் குர்தாக்கள் கூட ஒரு அரேபிய கலாசார ஆக்கிரமிப்பாக பார்க்கப் படும் நிலையம் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்புக் கெடுபிடிகள் ஏற்பட இடமிருக்கிறது, எனவே உடனுக்குடன் அவ்வாறான விடயங்களில் பாதகாப்புத் தரப்புடன் ஒத்துழைக்க அதிகரமளிக்கப் பட்ட ஒரு சமய ஆலோசனைக் குழு இருப்பது காலத்தின் தேவையாகும்!

மஸ்ஜிதுகளை சோதனையிடும் பொழுதும் அங்குள்ள உலமாக்களை விசாரிக்கும் பொழுதும், அவர்களிடமுள்ள நூல்கள் கிதாபுகள் குறித்து பாதுகாப்புத் தரப்பினருக்கு சந்தேகங்கள் ஏழ இடமுண்டு, அதேபோன்று குர்பானி நிரிவேற்றுவத்ற்கான கத்திகள் சிலவேளைகளில் மஸ்ஜிதுகளில் இருக்கலாம்!

இஸ்லாமிய அமைப்புக்களால் வெளியிடப்படுகின்ற நூல்கள் சஞ்சிகைகள் மொழிபெயர்ப்புக்கள் குறித்த அறிவும் தெளிவும் பாதுகாப்புத் தரப்புக்களிடம் இருக்க மாட்டது என்பதுவும் நாமறிந்த விடயமாகும்!


உண்மையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னால் இருக்கின்ற சர்வதேச பிராந்திய அரசியல் இராஜதந்திர இராணுவ பின்புலங்களை அரச உயர்மட்டத்தினர் உணர்ந்து ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக பார்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி அறிவுறுத்தல்கள் வழங்கி இருந்தாலும் முஸ்லிம்  சமூகத்திற்குள்ளிருந்து தான்    சந்தேக நபர்களை இனம்காண வேண்டிய கடப்பாடு பாதுகாப்புத் தரப்புக்களுக்கு இருக்கிறது, சந்தேகங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கும் வரை காத்திராது   வீடு வீடுகளாக சோதனையிட்டு சந்தேக நபர்களை கண்டுபிடிக்குமாறே சமயத் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

குறிப்பிட்ட சந்தேகத்துக்கிடமான கைதுகள், தடுத்து வைப்புகளின் பொழுது அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கப் படக் கூடாது என்பதில் அரசிற்கு நியாயமான அழுத்தங்கள் இருக்கின்றமையாலும் குறிப்பாக ஒரு சில முஸ்லிம் தலைமைகள் விமர்சிக்கப் படுவதாலும் பாதுகாப்புத் தரப்புக்களுக்கு கட்டளைகளை வழங்கும் ஜனாதிபதி பிரதமர், அமைச்சரவை, பாதுகாப்பு அமைச்சர் ஆகிய தரப்புக்களிடம் முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்று சிவில் சன்மார்க்கத் தலைமைகள் மேற்படி விடயங்களை எடுத்துக் கூறி சில வழிகாட்டல் கொள்கைகளை அல்லது பொறிமுறையினை ஏற்படுத்திக் கொள்வது அவசரமும் அவசியமுமான தேவையாகும்!

வீடுகளை சோதனையிடும் பொழுது, குடியிருப்புக்களில் இருந்து மக்களை முற்றாக வெளியேற்றி சோதனையிடுவதனை தவிர்த்து வீட்டு உரிமையாளர் அல்லது ஊர் பிரமுகர்கள் சிலரை தம்முடன் வைத்துக் கொள்ளுமாறு பாதுகாப்புத் தரப்பினரை அறிவுறுத்துதல் கட்டாயமாகும், பொதுவாக எல்லா இடங்களிலும் சுமுகமாக மக்களின் பூரண ஒத்துழைப்புடன் கடமைகள் மேற்கொள்ளப் பட்டாலும் ஒருசில இடங்களில் அவ்வாறு மிகவும் கடுமையாக பாதுகாப்புத் தரப்பினர் நடந்து கொள்வதாக தெரிவிக்கப் படுகிறது.

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலையில் பாதுகாப்புத் தரப்பினரோடு முழுமையாக ஒத்துழைக்க முஸ்லிம் சமூகம் தயாராக இருக்கின்ற அதேவேளை முஸ்லிம் தலைமைகள் மேலே சொல்லப்பட்ட சமூம் சார் கரிசனைகளையும் உடனுக்குடன் உரிய தரப்புக்களின் கவனத்திற்கு கொண்டு வருதல் அவர்களது பொறுப்பும் கடைமையுமாகும்!

-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்

No comments:

Post a Comment