மன்னிப்பு கேட்டால் திஸ்ஸவுக்கு விடுதலை ரணில்-மைத்ரி! - sonakar.com

Post Top Ad

Thursday, 4 April 2019

மன்னிப்பு கேட்டால் திஸ்ஸவுக்கு விடுதலை ரணில்-மைத்ரி!


கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் மற்றும் மைத்ரியின் கையொப்பங்களை போலியாக இணைத்து ஆவணம் ஒன்றைக் காட்டி தேர்தல் பிரளயத்தை உருவாக்க முனைந்த திஸ்ஸ அததநாயக்கவுக்கு மன்னிப்பு வழங்க ரணில் - மைத்ரி இணக்கம் தெரிவித்துள்ளனர்.


திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றம் ஊடாக மன்னிப்பு கேட்கும் பட்சத்தில் வழக்கைக் கைவிடவும் இருவரும் இணங்கியுள்ளதாக இன்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் வழக்கு விசாரணை எதிர்வரும் 24ம் திகதி இடம்பெறவுள்ளதோடு அன்றைய தினம் திஸ்ஸ மன்னிப்பு கோருவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment