உளவுத்துறையில் 'குழறுபடி': ஹரின் விசனம்! - sonakar.com

Post Top Ad

Sunday, 21 April 2019

உளவுத்துறையில் 'குழறுபடி': ஹரின் விசனம்!


இலங்கையரசின் உளவுத்துறையில் நிலவி வரும் குழறுபடியினாலேயே இன்றைய தாக்குதல் சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் போயுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ.

இன்றைய தினம் தேவாலயமொன்றில் தாக்குதல் இடம்பெறப் போவதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தை, புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் ஊடாகத் தகவலறிந்து தெரிவித்த போதிலும் பொறுப்புவாய்ந்த உளவுத்துறை ஏன் உடனடி நடவடிக்கையில் இறங்கவில்லையென்பது குறித்து ஆச்சரியமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 11ம் திகதியே இது குறித்து புலனாய்வுத்தகவ் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று காலை முதல் சமூகவலைத்தளங்கள் ஊடாக ஆவணப் பிரதியொன்று பரிமாறப்பட்டு வருகின்றமையும் அது தொடர்பில் இனித்தான் விசாரிக்க வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment