தொடரும் வெடிகுண்டு அச்சம்: கட்டானயிலும் கட்டுப்பாட்டு 'வெடிப்பு' - sonakar.com

Post Top Ad

Wednesday, 24 April 2019

தொடரும் வெடிகுண்டு அச்சம்: கட்டானயிலும் கட்டுப்பாட்டு 'வெடிப்பு'


இன்றைய தினம் கொழும்பு மற்றும் பல இடங்களில் சந்தேகத்துக்குரிய வகையில் காணப்பட்ட பொதிகள் தொடர்பில் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகி வருகிறது.முன்னதாக வெள்ளவத்தையில், கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று வெடிக்க வைக்கப்பட்டிருந்த நிலையில், கட்டானயில் விமானப்படையினர் குண்டொன்றை செயலிழக்கச் செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, களுபோவில பகுதயிலும் வெடிகுண்டு பொதி அச்சத்தில் சிறு பதற்றம் நிலவியிருந்த அதேவேளை ஞாயிறு முதல் பல இடங்களில் மக்கள் விழிப்புடன் தகவல் வழங்கி வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்துக்குரிய பொதிகள் தொடர்பில் தகவல் வழங்குவதற்கான தொடர்பிலக்கங்களை கீழ்க்காணலாம்:

0114 055 105
0114 055 106
0112 434 251
0112 433 335
0766 911 604

No comments:

Post a comment