அரசின் விரிசலைப் பயன்படுத்தி திட்டம் தீட்டியுள்ள பயங்கரவாதிகள்! - sonakar.com

Post Top Ad

Monday 22 April 2019

அரசின் விரிசலைப் பயன்படுத்தி திட்டம் தீட்டியுள்ள பயங்கரவாதிகள்!


கடந்த ஒக்டோபர் 26ம் திகதிக்குப் பின் ஜனாதிபதி - பிரதமர் தரப்புக்கிடையில் நிலவி வரும் விரிசலை நன்கு பயன்படுத்தியே பயங்கரவாதிகள் தாக்குதல் திட்டங்களை வகுத்துள்ளதாக விளக்கமளித்துள்ளார் ராஜித சேனாரத்ன.


ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் பலர், முன் கூட்டியே உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றமை குறித்து தொடர்ச்சியாக தகவல் வெளியிட்டு வரும் நிலையில் சம்பவத்திற்கு 14 நாட்கள் முன்பாகவும், முதல் நாளும், சம்பவ தினம் 10 நிமிடங்களுக்கு முன்பாகவும் கூட வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் எச்சரித்த போதிலும் அவையனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

அதேவேளை, நாட்டின் பிரதமர் அழைத்தும் பாதுகாப்பு கவுன்சில் கூட மறுத்ததாகவும், இலங்கையில் அவ்வாறு இடம்பெற்றது முதற்தடவையெனவும் தெரிவிக்கின்ற ராஜித, இரு தரப்பு விரிசலினால் உளவுத் தகவல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறி தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment