துருக்கியிலிருந்து இலங்கைக்குள் நுழைந்த 50 தீவிரவாதிகள்: வசந்த தகவல்! - sonakar.com

Post Top Ad

Monday, 29 April 2019

துருக்கியிலிருந்து இலங்கைக்குள் நுழைந்த 50 தீவிரவாதிகள்: வசந்த தகவல்!


துருக்கியிலிருந்து 50 தீவிரவாதிகள் இலங்கைக்குள் நுழைந்திருப்பதாக அந்நாட்டின் தூதரகம் 2017 மற்றும் 2018ம் ஆண்டு நான்கு தடவைகள் இலங்கை அரசுக்கு தகவல் வழங்கியதாகவும் அது தொடர்பில் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் தகவல் வெளியிட்டுள்ளார் வசந்த சேனாநாயக்க.இதற்கான தொலைநகல் பிரதியும் தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கின்ற வசந்த, அமைப்பைச் சேர்ந்த 50 பெயர்களின் பட்டியல் அதில் அடங்கியுள்ளதாகவும் 2015 இலிருந்து இலங்கையில் கல்வி, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளுக்குள் குறித்த நபர்கள் கலந்துள்ளதாக அரசுக்கு தொடர்ச்சியாக தகவல் வழங்கப்பட்டதாக வசந்த மேலும் தெரிவிக்கிறார்.

அண்மைய தாக்குதல்கள் பற்றியும் இந்திய உளவுத்துறை இலங்கை அரசுக்கு ஆறு மாத காலமாக தகவல் வழங்கி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment