5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக மாற்றுப் பரீட்சை: மைத்ரி - sonakar.com

Post Top Ad

Tuesday, 2 April 2019

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக மாற்றுப் பரீட்சை: மைத்ரி


ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நீக்குவதற்கான தனது யோசனை அதற்கான மாற்றுவழியுடனேயே செயற்படுத்தப் படும் என்கிறார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.


கடந்த வாரம், தான் முடிவாக அறிவித்துள்ளதாக தெரிவித்திருந்த அவர், தற்போது தான் யோசனையை முன் வைத்துள்ளதாகவும் அரசாங்கம் முடிவெடுக்கும் போது மாற்று வழியையும் முன் வைத்தே குறித்த பரீட்சையை நீக்கும் எனவும் விளக்கமளித்துள்ளார்.

இப்பின்னணியில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு பதிலாக 7ம் அல்லது 8ம் தரத்தில் மாற்றுப் பரீட்சை அறிமுகப்படுத்துவதற்கான யோசனையும் முன் வைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment