ஹெரோயின்: இலங்கை நபருக்கு சென்னையில் 30 வருட சிறை - sonakar.com

Post Top Ad

Tuesday, 9 April 2019

ஹெரோயின்: இலங்கை நபருக்கு சென்னையில் 30 வருட சிறை


சென்னையில் வங்கிக் காப்பகம் ஒன்றில் 1.14 கிலோ ஹெரோயினை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஏலவே சிறையில் இருக்கும் அசோக் குமார் என அறியப்படும் இலங்கை பிரஜைக்கு மேலும் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஏலவே 42 கிலோ ஹெரோயின் வைத்திருந்த நிலையில் கைதாகியிருந்த அசோக் குமாருக்கு 11 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த பத்து வருடங்களாக நடைபெற்று வந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டுள்ளது.

பிரபல பாதாள உலக பேர்வழிகள் பலர் தமிழ்நாட்டிற்கு குடி பெயர்ந்து அங்கிருந்தே தமது பாதாள உலக நடவடிக்கைகளை வழி நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment