பண்டிகைக்கால விசேட நடவடிக்கை: இதுவரை 29,000 வழக்குகள் - sonakar.com

Post Top Ad

Monday, 15 April 2019

பண்டிகைக்கால விசேட நடவடிக்கை: இதுவரை 29,000 வழக்குகள்


பண்டிகைக்காலத்தையொட்டி கடந்த 11ம் திகதி முதல் எதிர்வரும் 20ம் திகதி வரை நடைமுறையில் உள்ள பொலிஸ் போக்கவரத்து பிரிவினரின் விசேட நடவடிக்கைகளின் நிமித்தம் இதுவரை 29,461 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மாத்திரம் 941 பேர் இக்காலப் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வாகன விபத்துக்களும் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் அதிகரித்துள்ளதாக முன்னர் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment