2019: பண்டிகைக்கால வாகன விபத்துகள் அதிகரிப்பு! - sonakar.com

Post Top Ad

Monday, 15 April 2019

2019: பண்டிகைக்கால வாகன விபத்துகள் அதிகரிப்பு!


தமிழ் - சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெறும் வாகன விபத்துகளின் எண்ணிக்கை, கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இம்முறை 8 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



கடந்த 48 மணி நேரத்தில் மாத்திரம் 413 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, 49 பண்டிகைக்கால சண்டைகளும் இடம்பெறறுள்ளதாகவும் இதுவும் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் 20 வீதம் அதிகம் எனவும் நூற்றுக்கணக்கானோர் குடிபோதையில் வாகனம் செலுத்தியதன் பின்னணியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment