திக்வெல்ல: இராணுவ உடை - வாள் - தோட்டாக்களுடன் 10 பேர் கைது - sonakar.com

Post Top Ad

Sunday, 28 April 2019

திக்வெல்ல: இராணுவ உடை - வாள் - தோட்டாக்களுடன் 10 பேர் கைது


திக்வெல்ல நகரில், இராணுவ உடை, வாள் மற்றும் பயிற்சி தோட்டாக்கள் உட்பட்ட உபகணங்களுடன் 10 பேர் சந்தேகத்தின் பேரில கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.இன்றைய தினம் பிரதேசத்தில் வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னணியிலேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது, மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்படும் அடையாள அட்டைகள், வாள்கள் மற்றும் இரவு நேரம் பயன்படுத்தக்கூடிய தொலைகாட்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a comment