10ம் திகதி முதல் மின் வெட்டு இல்லை: ரவி - sonakar.com

Post Top Ad

Friday, 5 April 2019

10ம் திகதி முதல் மின் வெட்டு இல்லை: ரவி


எதிர்வரும் 10ம் திகதி முதல் தற்போது அமுலில் இருக்கும் மின் வெட்டு முற்றாக நீக்கப்படும் என தெரிவிக்கிறார் அமைச்சர் ரவி கருணாநாயக்க.இது வரை மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு மன்னிப்பு கோருவதாக தெரிவிக்கும் அமைச்சர் அடுத்த நான்கு மாதங்களுக்கு பொறுப்புடன் மின்சார பாவனை இருந்தாலேயே நீண்ட கால தீர்வைக் காண முடியும் எனவும் தெரிவிக்கிறார்.

எதிர்காலத்தின் மின் வெட்டு பிரச்சினை இல்லாதிருக்க மூன்று கட்ட தீர்வைத் தாம் அமைச்சரவையில் முன் வைத்துள்ளதாகவும் ரவி மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment