விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கை மாணவர்களின் ராவணா - 1 - sonakar.com

Post Top Ad

Thursday 18 April 2019

விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கை மாணவர்களின் ராவணா - 1


இலங்கை மாணவர்கள் இருவரினால் வடிவமைக்கப்பட்டு இராவணா-1 என பெயரிடப்பட்டுள்ள 1000 கியுபிக் சென்டி மீற்றர் (1 லீற்றர் கொள்ளளவு) அளவான சிறிய விண்கலம், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு இன்று அதிகாலை 2.30 (இலங்கை நேரம்) அளவில் ஏவப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது ஆர்தர் சி. கிளார்க் மையம்.




தரிந்து தயாராத்ன, துலானி சமிக்க ஆகிய பேராதெனிய பல்கலை மற்றும் ஆர்தர் சி. கிளார்க் கல்வி நிலையத்தைச் சேர்ந்த இருவரினால் 1.1 கிலோ எடையில் வடிவமைக்கப்பட்டுள்ள் இச்சிறிய விண்கலம் சுமார் ஒன்றரை முதல் ஐந்து வருட காலம், பூமியிலிருந்து 400 கி.மீற்றர் உயரத்தில் சுற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையைப் பல்வேறு கோணங்களில் படம் பிடிப்பதுடன் பிராந்திய நிலப்பகுதிகளையும் குறித்த விண்கலம் ஆராய்வு நிமித்தம் படம் பிடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிக்னஸ்-1 ஊடாக ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஏற்பாட்டில் இவ்விண்கலம் ஏவப்பட்டுள்ளது.


இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் விண்கலம் ஒன்றை அனுப்பியதாக தெரிவித்ததன் பின்னணியில் சர்ச்சை உருவாகியிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment