உடத்தலவின்ன: UNWS ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 March 2019

உடத்தலவின்ன: UNWS ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம்


கண்டி - உடத்தலவின்ன மடிகே நேர்பர் நலன்புரிச் சங்கத்தினர் (UNWS) நடாத்துகின்ற வருடாந்த மருத்துவ முகம் இந்த முறையும் ஆறாவது தடவையாக உடத்தலவின்ன ஜாமியுள் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் அமைப்பின் தலைவர் எம். ரிப்கி முஸ்தாக் அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக் கிழமை (24.03.2019) காலை 8 மணி முதல் பி.ப 3 மணி வரை நடைபெற இருக்கின்றது.இந்தமுறை நடாத்தப்படுக்கின்ற மருத்துவ முகாமில் இரத்ததான நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் மகப்பேற்று வைத்தியம், குழந்தை நேய்களுக்கான வைத்தியம், கண், மூக்கு, தொண்டை வைத்தியம்  மற்றும் உடலியல்  துறைகளுக்கான விசேட வைத்திய நிபுணர்கள் வருகைதரவுள்ளனர் என அமைப்பின் நிதிச் செயலாளர் என்.பீ. மர்சூக்  தெரிவித்தார். 

இந்த முறை நடை பெறுகின்ற மருத்துவ முகமில் மார்புப் புற்று நோய், சிறு நீரகப் பரிசோதனை மற்றும் நீரிழிவு நோயாளிகளின் பாதப் பரிசோதனை என்பவைகளும் நடைபெறவுள்ளன. 

இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டுதவும் வைத்திய துறையைச் சார்ந்தவர்களுக்கு விசேட நினைவு சின்னங்களை வழங்க அகுரணை நேஷன் ஸ்டூடியோ உரிமையாளர் ஏ.சீ.எம். நௌசர் ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அத்துடன் வழக்கம் போல் இந்த வைத்திய முகாமிற்கான மருந்துகளுக்கான அணுசரனையை றோயல் பார்மசி உரிமையாளர் அல்ஹாஜ் நியாஸ் வழங்கி வருவதோடு இந்த அமைப்பின் செயலாராக மிர்ஷா அஷ்ராப் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

-AGM Najeeb


  No comments:

Post a Comment