ஒக்டோபரில் செய்த பிழையால் பல நன்மைகள்: மஹிந்த விளக்கம்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 19 March 2019

ஒக்டோபரில் செய்த பிழையால் பல நன்மைகள்: மஹிந்த விளக்கம்!


கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் மைத்ரிபாலவின் அழைப்பையேற்றுப் பிரதமர் பதவியை பொறுப்பேற்றது தான் செய்த தவறாயினும் கூட அதில் பல நன்மைகள் கிடைத்ததாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.

தனிப்பட்ட ரீதியில் தனது அரசியல் எதிர்காலத்துக்கு அது பாதகமாக அமையும் என நலன் விரும்பிகள் எச்சரித்திருந்த போதிலும் அம்முடிவைத் தான் எடுக்க நேரிட்டதன் பின்னணியில் அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்தை தகர்க்கக் கூடியதாக நிலைமை மாறியதாகவும், ஜனாதிபதி அதலிருந்து எதிர்க்கட்சியுடன் பணியாற்றும் சூழ்நிலை உருவானதாகவும், இவை அரசியல் ரீதியான அடைவுகள் எனவும் மஹிந்த மேலும் விளக்கமளித்துள்ளார்.


எனினும், ஐக்கிய தேசிய முன்னணி அரசின் வரவு-செலவுத் திட்டத்தை முறியடிக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் திட்டமும் பலிக்காது போயுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச தற்போது எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment