UNP பிரதேச சபை உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 March 2019

UNP பிரதேச சபை உறுப்பினர் மீது துப்பாக்கிச் சூடு!


பெலியத்த பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசியக் கட்சியின் கபில அமரக்கோன் மீது இனந்தெரியாதோர் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


துப்பாக்கிச் சூட்டில் காயமுற்ற நிலையில் காணப்பட்ட கபிலவை, அவரது உறவினர் ஒருவர் சென்ற நிலையில் கண்டுள்ளதுடன் பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து தங்கல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கபில அமரக்கோன் தனிமையிலேயே வசித்து வந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment