இனி மின் விநியோகம் தடைப்படாது: அமைச்சு - sonakar.com

Post Top Ad

Wednesday, 20 March 2019

இனி மின் விநியோகம் தடைப்படாது: அமைச்சு


நுரைச்சோலை அனல் மின் நிலைய ஜெனரேட்டர் ஒன்று பழுதடைந்ததன் பின்னணியில் கடந்த இரு நாட்களாக மின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததோடு பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.


எனினும், தற்போது குறித்த ஜெனரேட்டர் திருத்தப்பட்டு விட்டதாகவும் இப்பின்னணியில் இனி மின் விநியோகம் தடைப்படாது எனவும் மின்சார அமைச்சு தெரிவிக்கிறது.

2015 வரை தொடர்ச்சியாக பழுதடைந்து வந்திருந்த இயந்திரங்களை சீன நிறுவனம் புதுப்பித்திருந்ததோடு பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment