நியுசிலாந்து தாக்குதல் தொடர்பில் Royal Commission விசாரணை: ஜசின்டா - sonakar.com

Post Top Ad

Monday 25 March 2019

நியுசிலாந்து தாக்குதல் தொடர்பில் Royal Commission விசாரணை: ஜசின்டா


மார்ச் 15ம் திகதி, நியுசிலாந்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் அந்நாட்டின் சட்டத்துக்கமைவான அதி உயர் மட்ட ஆணைக்குழு நிறுவப்பட்டு (Royal Commission) விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் பிரதமர் ஜசின்டா அர்டன்.



குறித்த தாக்குதலை தவிர்ப்பதற்கு நியுசிலாந்து பொலிஸ், உளவுத்துறை மற்றும் அரசாங்கம் எங்கு தவறியது? என்பது முதல் எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளை தவிர்ப்பதற்க்குத் தேவையான நடவடிக்கைகள் வரையான முழு அளவிலான விசாரணை மற்றும் பரிந்துரைகளை இவ்வாணைக்குழு வழங்கும் என அந்நாட்டு ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

தமது நாட்டில் இடம்பெற்ற தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என பகிரங்கமாகவே அறிவித்த ஜசின்டா, பல்வேறு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு  ஆறுதலான அளவில் நடந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:

Post a Comment