36 நாடுகளுக்கு இலங்கைக்கான விசா கட்டணத்தை நீக்க முடிவு - sonakar.com

Post Top Ad

Monday, 25 March 2019

36 நாடுகளுக்கு இலங்கைக்கான விசா கட்டணத்தை நீக்க முடிவு

ieKcaVb

வீழ்ச்சியடையும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் செயற்திட்டத்தின் பின்னணியில் 36 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை வருவதற்கான விசா கட்டணத்தை அடுத்த ஆறு மாதங்களுக்கு நீக்குவதற்கு முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய யூனியன், ஜப்பான், நியுசிலாந்து, அவுஸ்திரேலியா, தாய்லாந்து, கம்போடியா உட்பட்ட நாடுகள் இதில் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகையின் போது பெறப்படும் விசாவுக்கான கட்டணமே இங்கு நீக்கப்படவுள்ளமையும் மே மாதம் தொடக்கம் சுற்றுலா பயணிகள் வருகை சரிவு காண்பதால் இதனை பரீட்சார்த்த நடவடிக்கையாக மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment