யார் சொல்லும் 'வில்பத்து' கதை உண்மை? BBS துறவிக்கு குழப்பம்! - sonakar.com

Post Top Ad

Monday, 25 March 2019

யார் சொல்லும் 'வில்பத்து' கதை உண்மை? BBS துறவிக்கு குழப்பம்!


வில்பத்தில் காடழிப்பு இடம்பெறுவதாகவும் அங்கு முஸ்லிம்கள் குடியேற்றப்படுவதாகவும் ஜனாதிபதி செயலகத்தில் பணி புரியும் ஆனந்த சேகர தேரர் சொல்கையில், 2012ன் பின்னர் ஒரு அங்குல நிலமேனும் கொடுக்கப்படவில்லையென ஜனாதிபதி தெரிவிக்கின்றமை குழப்பமாக உள்ளதாக தெரிவிக்கிறார் ஞானசாரவின் சகா மாகல்கந்தே சுதந்த தேரர்.சிங்ஹல இராவய எனும் கடும்போக்குவாத அமைப்பின் செயலாளராகவும் தன்னைக் காட்சிப்படுத்தி வரும் குறித்த தேரர் இது தொடர்பில் ஜனாதிபதியும் - அவரது செயலகத்தில் வேலை செய்யும் இன்னொருவரும் இரு வேறு கருத்துக்கள் தெரிவிப்பது இவ்விவகாரம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளதனை எடுத்துக் காட்டுவதாக தெரிவிக்கிறார்.

இந்நிலையில், இதனை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமையும், இச்சூழ்நிலையில் ரிசாத் பதுயுதீனின் சொத்து விபரங்களை ஆராய பிறிதொரு குழு லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment