தொடர்ந்தும் ஏமாற்றப் படுகிறோம்: PickMe சாரதிகள் போராட்டம் - sonakar.com

Post Top Ad

Thursday 21 March 2019

தொடர்ந்தும் ஏமாற்றப் படுகிறோம்: PickMe சாரதிகள் போராட்டம்


கவர்ச்சிகரமான விளம்பரங்களோடு ஆரம்பித்து, சாரதிகளை உள்ளீர்த்த பின் குறைவான கட்டணத்தையே தருவதாக பிக் மீ எனும் பெயரில் இயங்கும் வாகன வாடகை நிறுவனம் மீது சாரதிகள் மீண்டும் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.



குறித்த நிறுவனம் ஆரம்பமான காலத்திலும் தமக்கு சொல்லப்பட்டதற்கும் தரப்படும் கொடுப்பனவுகளுக்கும் சம்பந்தம் இல்லையென குறித்த நிறுவனத்தில் இணைந்த சாரதிகள் முறையிட்டிருந்தனர். இது தொடர்பில் நாம் காணொளியொன்றையும் வெளியிட்டிருந்த நிலையில் பிக் மீ நிறுவனத்தினர் சோனகர்.கொம்மினை தொடர்பு கொண்டு அதற்கு மறுப்பு வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில்,  இரண்டு வருடங்களின் பின் மீண்டும் சாரதிகள் தாம் ஏமாற்றப் பட்டுக் கொண்டிருப்பதாகவும், தொழில் உத்தரவாதமற்ற நிலையில் இருப்பதாகவும், எரிபொருள் செலவு மற்றும் நிறுவன கட்டணத்தை செலுத்திய பின் கையில் எஞ்சுவது சொற்பமான தொகையே எனக் கூறி இவ்வாரம் மீண்டும் நிறுவன அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், அவர்களது கோரிக்கைகளை முகாமைத்துவம் உதாசீனம் செய்வதாக சாரதிகள் முறையிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிறுவனத்தில் 90,000 சாரதிகள் பதிவு செய்திருப்பதாகவும் அவர்கள் குறித்த தினத்தில் பணி புரிந்தாலும் இல்லாட்விட்டாலும் தினசரி 100 ரூபா அறவிடப்படுவதாகவும் சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments:

Post a Comment