இன்றோடு முடியவில்லை; இன்னொரு கட்டப் பேச்சுவார்த்தை: தயாசிறி - sonakar.com

Post Top Ad

Thursday, 21 March 2019

இன்றோடு முடியவில்லை; இன்னொரு கட்டப் பேச்சுவார்த்தை: தயாசிறி


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பொதுஜன பெரமுன இடையே இணக்கப்பாட்டை எட்டும் நிமித்தம் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்த நிலையில் மேலும் ஒரு கட்டப் பேச்சுவார்த்தை ஏப்ரலில் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் சு.க செயலாளர் தயாசிறி ஜயசேகர.



ஏப்ரல் 10ம் திகதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறும் எனவும் இரு தரப்பு வேற்றுமைகளைக் களையும் நிமித்தம் இது வரை ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், சு.க தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளரை பெரமுன தரப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென மஹிந்த அணியினர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment