இலங்கையில் முதலீடு: ஓமானிலிருந்து மறுப்பு! - sonakar.com

Post Top Ad

Thursday, 21 March 2019

இலங்கையில் முதலீடு: ஓமானிலிருந்து மறுப்பு!


இலங்கையில் எண்ணை சுத்திகரிப்பு தளம் ஒன்றை உருவாக்குவதற்கான கூட்டுத் திட்டம் ஒன்றில் ஓமான் இணைந்துள்ளதாகவும் 3.8 பில்லியன் டொலர் முதலிட உள்ளதாகவும் அரசாங்க தரப்பில் வெளியிடப்பட்ட தகவலை அந்நாட்டின் அமைச்சு மட்டத்திலிருந்து மறுக்கப்பட்டுள்ளது.



3.8 பில்லியன் டொலருக்கான காசோலையில் யார் ஒப்பமிடப் போகிறார்கள் எனத் தெரியாது, அமைச்சு மட்டத்தில் அவ்வாறான எந்த இணக்கப்பாடும் இல்லை, எங்களுக்கும் இது புதிய தகவலாக இருக்கிறது என ஓமானின் எண்ணை மற்றும் எரிவாயு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், சிங்கப்பூர் - ஓமான் இணைந்து முதலிடவுள்ளதாகவும் 30 வீத பங்குக்கே ஓமான் 3.8 பில்லியன் டொலர் முதலிடுவதாகவும் இலங்கை முதலீட்டு சபை தலைவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment