கிடைத்த நன்கொடைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கே வழங்கும் "Eggboy" - sonakar.com

Post Top Ad

Monday, 18 March 2019

கிடைத்த நன்கொடைகளை பாதிக்கப்பட்டவர்களுக்கே வழங்கும் "Eggboy"


நியுசிலாந்து பயங்கரவாத தாக்குதல்களையடுத்து முஸ்லிம் குடிவரவாளர்களுக்கு எதிராக கருத்துரைத்து இனவாதம் கொட்டிய அவுஸ்திரேலிய செனட்டர் மீது அந்நாட்டின் 17 வயது இளைஞன் வில் கொனலி முட்டைத் தாக்குதல் நடாத்தி பொலிசாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.உடனடியாக அவரது சட்டச் செலவுகளுக்கு நன்கொடைகள் குவிந்ததோடு உலகளாவிய அளவில் ஆதரவும் குவிந்து குறித்த இளைஞன் என பிரபலமாக அறியப்படுகிறார். இந்நிலையில், அவுஸ்திரேலியாவில் உள்ள முன்னணி குற்றவியல் வழக்கறிஞர்கள் தாம் கட்டணம் எதுவுமின்றி வில் கொனலிக்காக வாதாடத் தயார் என முன் வந்துள்ளதுடன் தொடர்ந்தும் நன்கொடைகள் கிடைக்கப்பெற்று வருகின்றன.


எனவே, அவற்றை நியுசிலாந்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தினருக்கே தான் நன்கொடையாக வழங்கப்போவதாக வில் அறிவித்துள்ளதுடன், முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் இல்லை, பயங்கரவாதிகளுக்கு எந்த சமயமும் இல்லையென வலியுறுத்தி ட்விட்டர் செய்தியும் வெளியிட்டுள்ளார்.குறித்த இளைஞன் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளதுடன் அவரது தைரியத்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment