கொள்கை அறிக்கையை பிரதமருக்கும் E-mailல் அனுப்பிய பயங்கரவாதி! - sonakar.com

Post Top Ad

Saturday, 16 March 2019

கொள்கை அறிக்கையை பிரதமருக்கும் E-mailல் அனுப்பிய பயங்கரவாதி!


நியுசிலாந்து, கிறிஸ்ட்சேர்ச், அல்நூர் பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்குச் செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக தனது வெள்ளையின மேன்மைவாதக் கொள்கையடங்கிய அறிக்கையை நியுசிலாந்து பிரதமருக்கும் பயங்கரவாதி பிரன்டன் மின்னஞ்சலில் அனுப்பி வைத்துள்ளமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


பிரதமரின் அலுவலகத்துக்கே அந்த மின்னஞ்சல் வந்திருப்பதாகவும் பிரதமரின் பிரத்யேக மின்னஞ்சலுக்கு வரவில்லையெனவும் நியுசிலாந்து பிரதமர் அலுவலக பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.


எனினும், முதல் நாளே தனது தாக்குதல் விபரங்களை  இணையத்தள இனவாதக் குழுமங்களிடம் பகிர்ந்து கொண்டிருந்த பிரன்டன் தாக்குதல் காணொளியை பேஸ்புக் ஊடாக நேரடி ஒளிபரப்பும் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment