மாகந்துரே மதுஷின் வருகையை எதிர்பார்த்து விழிப்புடன் CID - sonakar.com

Post Top Ad

Friday, 29 March 2019

மாகந்துரே மதுஷின் வருகையை எதிர்பார்த்து விழிப்புடன் CID


டுபாயில் மாகந்துரே மதுஷோடு கைதானவர்கள் ஒருவர் பின் ஒருவராக இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டு வரும் நிலையில் மதுஷும் திருப்பியனுப்பப்படுவதை எதிர்பார்த்து விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தமது நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.நேற்றயை தினம் கஞ்சிபானை இம்ரான் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு தற்போது குற்றப்புலனாய்வுப் பிரவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிசார் தெரிவிக்கின்றன. இதேவேளை, இம்ரான் விமானநிலையம் ஊடாகவே மாலைதீவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் பாரிய போதைப்பொருள் மற்றும் கொள்ளைச் சம்பவங்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள மதுஷின் வருகைக்காக குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தம்மைத் தயார் படுத்திக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment