இலங்கை - சீன வர்த்தக உறவுக்கு சாதகமான சூழல்: அசாத் சாலி - sonakar.com

Post Top Ad

Friday, 29 March 2019

இலங்கை - சீன வர்த்தக உறவுக்கு சாதகமான சூழல்: அசாத் சாலி


இலங்கை மற்றும் சீன நாட்டிற்கிடையிலான விவசாய உடன்பாடுகள் தொடர்பான  பரஸ்பர உறவில் பாரிய அக்கறை கொண்டுள்ளதாகவும்,  சீனாவுடனான வியாபாரத்தொடர்புகளை பேணிக்கொள்வதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாகவும் மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ். சாலி  சீனாவின் தெற்கு மாகாணமாகிய   ஹைனானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசியாவிற்குரிய போவோ மாநாட்டின் போது குறிப்பிட்டார்.

மேல் மாகாண ஆளுநர் எம். அசாத் எஸ். சாலி மற்றும் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோர்  இலங்கை சார்பாக கலந்து கொண்டுள்ளனர்.கடந்த எழுபது ஆண்டுகளிற்கு மேலாக சீனாவானது விவசாயத்துறையில் பாரிய இயந்திர சாதானங்களையும், இரசாயன வளமாக்கிகளையும் உலகிற்கு வழங்கியுள்ளதாகவும், ஹைனான் மாகாணமானது விவசாயத்திற்கு  புகழ் பெற்றதும், நிபுணத்துவம் வாய்ந்த  விவசாய சாதனங்களையும், உற்பத்திகளையும்  தன்னகத்தே கொண்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

லக்சன்பேர்க் பிரதமர் சேவியர் பட்டல் அவர்களை இந்த விஜயத்தின் போது மேல்மாகாண ஆளுநர் சந்தித்தார். ஜக்கிய நாட்டிற்கான முன்னாள் செயலாளர் நாயகம் பான்கிமூன், போவோ மாநாட்டின் தலைவர் மற்றும் ஹைனான்  மாகாணத்தின் ஆளுநர் கலாநிதிசெய்ன்  சியாஓமிங் அவர்களையும் சந்தித்தார்.

இம் மாநாடானது இரு நாடுகளிற்கிடையிலான வியாபாரம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்திக்கொள்ள மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும்  குறிப்பிட்டார்.

நாம் விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்துடனான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை சீன நாட்டின் உதவியுடன் மேம்படுத்திக் கொள்ள ஆர்வத்துடன் உள்ளதாக குறிப்பிட்டார்.   

வளர்ச்சியை நோக்கி முன் செல்ல வேண்டுமா அல்லது பின்னடைவு நிலைக்கு தள்ளப்படவேண்டுமா என உலக நாடுகள் தெரிவு செய்ய வேண்டிய தேவை  இருப்பதாக சீன ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், இது தொடர்பில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் தமது கருத்தை தெரிவிக்க ஆவலாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆசியா டெவோஸ் மாநாட்டைப் போன்ற இந்த மாநாடானது ஹைனான் மாகாணத்திலுள்ள போவோ நகரில் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்றது.  ஆசியா மற்றும் அதனை அண்டியுள்ள நாடுகளின் தலைவர்கள், வணிக மற்றும் கல்விசார் நிறுவனங்களை இது உள்ளடக்கியுள்ளது. 

-Rasooldeen

No comments:

Post a comment