உலகளாவிய ரீதியில் அனைத்து Boeing 737 Max விமானங்களும் முடக்கம் - sonakar.com

Post Top Ad

Thursday, 14 March 2019

உலகளாவிய ரீதியில் அனைத்து Boeing 737 Max விமானங்களும் முடக்கம்எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விமான விபத்தைத் தொடர்ந்து பல நாடுகள் Boeing 737 Max ரக விமானம் தமது வான் பரப்பில் பறப்பதற்குத் தடை விதித்திருந்தன.


எனினும், தாம் உடன்படப் போவதில்லையென தொடர்ந்தும் தெரிவித்து வந்த அமெரிக்கா, ஈற்றில் உலகளாவிய ரீதியில் இயங்கும் சுமார் 371 ரக விமானங்களையும் தற்காலிகமாக தரையிறக்கி வைக்க உத்தரவிட்டுள்ளது.கடந்த வருட இறுதியில் இந்தோனேசியாவில் லயன் எயார் மற்றும் இம்மாதம் எத்தியோப்பியன் எயார் லைன்ஸ் விபத்துகள் ஊடாக குறித்த ரக நவீன விமானம், சுமார் 346 உயிர்கள் பலியாவதற்குக் காரணமாகியுள்ளது. இந்நிலையில் எத்தியோப்பிய விபத்தின் பரிசோதனையின் பின்னணியில் மேலதிக பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து அமெரிக்காவும் உலக நாடுகளுடன் ஒன்றிணைய இணங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment