"குர்ஆனிய சிந்தனை" ஜுஸ்உ அம்ம விளக்கவுரை: பாகம் இரண்டின் வெளியீட்டு விழா - sonakar.com

Post Top Ad

Thursday 14 March 2019

"குர்ஆனிய சிந்தனை" ஜுஸ்உ அம்ம விளக்கவுரை: பாகம் இரண்டின் வெளியீட்டு விழா


உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை ஜுஸ்உ அம்ம விளக்கவுரை பாகம் இரண்டின் வெளியீட்டு விழா

மிஷ்காத் ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை ஜுஸ்உ அம்ம விளக்கவுரை பாகம் இரண்டின் வெளியீட்டு விழா எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 6.30 மணி முதல் கொழும்பு- 07, ஹெக்டெர் கொபேகடுவ மண்டபத்தில் நடைபெறவுள்ளது.


ஜாமிஆ நளீமிய்யாவின் 2000ஆம் ஆண்டு பட்டதாரிகள் குழுவினரின் ஏற்பாட்டில் இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் அஷ்ஷெய்க் என்.எம்.எம். மிப்லி (நளீமி) தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் என். செல்வகுமரன் பிரதம அதிதியாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா கௌரவ அதிதியாகவும் ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி விஷேட அதிதியாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.


கொழும்பு பல்கலைக்கழக சட்ட ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி ஏ. சர்வேஸ்வரன் மற்றும் ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ஜே.எம். அரபாத் கரீம் ஆகியோர் குர்ஆனிய சிந்தனை நூலை முன்வைத்து உரை நிகழ்த்தவுள்ளனர்.


No comments:

Post a Comment