Boeing 737 Max தடை: அடம் பிடிக்கும் அமெரிக்கா - sonakar.com

Post Top Ad

Wednesday 13 March 2019

Boeing 737 Max தடை: அடம் பிடிக்கும் அமெரிக்கா

G3Verw7

ஐக்கிய இராச்சியம், சீனா, ஐரோப்பிய யூனியன், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகள் சில மாதங்களுக்குள் இரண்டாவது தடவை விபத்துக்குள்ளாகிய Boeing 737 Max ரக விமானம் தமது வான்பரப்பில் நுழைவதற்கு தற்காலிகமாகத் தடை விதித்துள்ள நிலையில் இன்று நியுசிலாந்து, வியட்நாம் மற்றும் ஹொங்கொங் இணைந்துள்ளன.


எனினும், தமது நாட்டில் இயங்கும் குறித்த ரக விமானங்கள் பற்றி இதுவரை எச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான அவசியம் ஏற்படவில்லையென தெரிவிக்கின்ற அமெரிக்கா தமது நாட்டு நிறுவனத்தின் தயாரிப்பை மலினப்படுத்த முடியாது என தெரிவிக்கிறது.


கடந்த வருட இறுதியில் லயன் எயார் மற்றும் இவ்வாரம் எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் என பொய்ங் நிறுவனத்தின் நவீன தயாரிப்பு Boeing 737 Max இரு வேறு விபத்துக்களில் சிக்கி பாரிய உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏனைய நாடுகள் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

எனினும், அமெரிக்கா, தாம் இது பற்றி அலட்டிக் கொள்ளப் போவதில்லையென தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment