'பிரைட் ரைஸ்' கேட்டு கடை உடைத்த பெரமுன பிரதேச சபை தலைவர் - sonakar.com

Post Top Ad

Wednesday, 13 March 2019

'பிரைட் ரைஸ்' கேட்டு கடை உடைத்த பெரமுன பிரதேச சபை தலைவர்பிரைட் ரைஸ் கேட்டு உணவக உரிமையாளர், அவரது எட்டு மாத கர்ப்பிணியான மனைவியையும் தாக்கித் தூற்றி உணவகத்துக்கும் கெகிராவ பிரதேச சபை தவிசாளரால் (பெரமுன) சேதம் விளைவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று ஹபரனயில் இடம்பெற்றுள்ளது.


கடந்த 7ம் திகதி மாலை 5 மணியளவில் வந்து தமக்கு பிரைட் ரைஸ் வேண்டுமென ஓடர் செய்த குறித்த நபர், பின்னர் தமது பரிவாரங்களுடன் அங்கிருந்து சென்று மூன்று மணி நேரமாக திரும்பாத நிலையில் அதனை வேறு வாடிக்கையாளருக்கு வழங்கியதாகவம் பின்னர் இரவு 8.40 அளவில் குடிபோதையில் வந்த கெகிராவ பிரதேச சபை தவிசாளர் பிரைட் ரைஸை கேட்டு ரகளையில் ஈடுபட்டதுடன் தனது மனைவி பிள்ளைகளையும் தகாத வார்த்தைகளால் திட்டி தன் மீதும் தாக்குதல் நடாத்தியதாகவும் உணவக உரிமையாளர் பொலிசில் முறையிட்டுள்ளார்.எனினும், சம்பவம் பற்றி முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இரு தரப்பு இரு வேறு விதமாக முறையிட்டுள்ளதாகவும், கெகிராவ பிரதேச சபைத் தலைவருக்கு எதிராக முறைப்பாடில்லையெனவும் தெரிவிக்கின்ற ஹபரன பொலிசார், தாம் 'விசாரணையை' மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment