Boeing 737 Max: ஐரோப்பா - இந்தியாவிலும் தடை! - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 March 2019

Boeing 737 Max: ஐரோப்பா - இந்தியாவிலும் தடை!


எத்தியோப்பியன் எயார்லைன்ஸ் விபத்தையடுத்து அமெரிக்காவின் பொய்ங் நிறுவனத்தின் நவீன விமானம் Boeing 737 Max தமது வான் பரப்பில் பறப்பதற்கு ஐக்கிய இராச்சியம் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவும் தடை விதித்துள்ளது.


முன்னதாக சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து உட்பட்ட நாடுகள் தடையை அறிவித்திருந்த நிலையில் ஏனைய நாடுகளும் இணைந்துள்ளன.


157 பேரைக் காவு கொண்ட கொடூர விபத்து இவ்வகை விமானத்தில் ஏற்பட்ட இரண்டாவது விபத்தாகும். இந்நிலையிலேயே பாதுகாப்பு கருதி பெரும்பாலான நாடுகள் இத்தடையை அறிவித்துள்ளன. எனினும், அமெரிக்க உள்நாட்டு விமான சேவைகள் தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment