குடு ரொஹானின் மனைவி 'அருணி பபா' + தெல் சூட்டி கைது - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 March 2019

குடு ரொஹானின் மனைவி 'அருணி பபா' + தெல் சூட்டி கைதுகுடு ரொஹான் என அறியப்படும் பிரபல பாதாள உலக பேர்வழியின் மனைவியான அருணி பபா எனும் புனைப் பெயர் கொண்ட நிரோசனி (30) மற்றும் தெல் சூட்டியென அறியப்படும் மேலும் ஒரு பாதாள உலக பேர்வழியும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.மட்டக்குளியில் இட்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் குடு ரொஹான் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் அருணி பபா ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தை நடாத்தி வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கைதான போது 10 லட்சம் ரூபா பணமும் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த நபருக்கு சொந்தமான வீடொன்றிலிருந்தே தெல் சூட்டி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment