ரணிலே ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும்: சரத் பொன்சேகா - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 March 2019

ரணிலே ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும்: சரத் பொன்சேகா


மீண்டும் பழைய கூட்டணியுடன் இணைந்து தேசிய அரசு அமைப்பதில் தமக்கு உடன்பாடில்லையென தெரிவிக்கும் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவே ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட வேண்டும் என தெரிவிக்கிறார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை மீண்டும் இணைத்துக் கொண்டு தேசிய அரசு அமைப்பதால் எவ்வித பயனும் இல்லையென கருத்து வெளியிட்டுள்ள அவர், அதற்குத் தாம் உடன்படப் போவதில்லையெனவும் தெரிவிக்கிறார்.

இதேவேளை, இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே 'பொது வேட்பாளர்' களமிறக்கப்படுவார் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment