வெசக் தினத்துக்குள் ஞானசாரவை விடுவிக்க புதிய முயற்சி - sonakar.com

Post Top Ad

Wednesday, 27 March 2019

வெசக் தினத்துக்குள் ஞானசாரவை விடுவிக்க புதிய முயற்சி


சுதந்திர தினத்தன்று ஞானசாரவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது நடைபெறாது போன நிலையில் தற்போது எதிர்வரும் வெசக் போயா தினத்துக்குள் அவரை விடுவிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கிறது சிங்ஹல ராவய.ஞானசாரவின் ஆஸ்தான பேச்சாளரான குறித்த அமைப்பின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த இதற்கான முன்னெடுப்புகளை செய்து வரும் அதேவேளை எவ்வாறாயினும் ஞானசார விடுவிக்கப் படுவதே கௌரவம் என தெரிவிக்கிறார்.

நீதிமன்ற அவமதிப்பின் பின்னணியில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஞானசார, இதுவரையான காலத்தை பெரும்பாலும் வைத்தியசாலையிலேயே கழித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment